

பாடல்: உன் பேரை சொல்லு போதே
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஸ்ரேயா க்ஹோசல், ஹரிசரண்
இசை: G.V.பிரகாஷ் குமார்
பாடல் எழுதியவர்: நா.முத்துக்குமார்
ஷங்கரின் உதவியாளர் வசந்தபாலன் வெயில் படத்தில் மூலம் தமிழ் படங்களை இன்னொரு பரிமாணத்திற்குள் கொண்டு சென்றவர் அடுத்து அங்காடி தெரு என்ற படத்தின் மூலம் விழும்புநிலையில் உள்ள மனிதர்களை பற்றி எடுத்து இருக்கிறார்.G.V.பிரகாஷ் குமார் (ஆயிரத்தில் ஒருவனில் பிரமாண்டமான இசையால் நம்மை கவர்ந்தவர்) இசையில் நா.முத்துக்குமார் எழுத்தில் பாடல்கள் மிகவும் அருமையாக வந்துள்ளது. முக்கியமாக உன் பேரை சொல்லும் போதே பாடல் எல்லார் மனதிலும் இடம் பெற்று இருக்கிறது.
அந்த காலத்தில் சில இசை கருவிகளை வைத்தே இளையராஜா ஒரு இசை ராஜாங்கமே நடத்தினரர். முக்கியமாக புல்லாங்குழல் மற்றும் வயலின் வாசித்தே நம் மனதை வசியம் பண்ணி இருப்பார். இந்த பாடலும் அந்த வகையிலே சேர்ந்தது. கிரவாணி ராகத்தில் A.R. ரஹ்மான் இசையில் "வெண்ணிலவே வெண்ணிலவே" என்ற பாட்டு மின்சார கனவில் வந்தது போல அதே மெட்டில் இந்த பாட்டை G.V.பிரகாஷ் குமார் இசை அமைத்து இருக்கிறார்.
இந்த பாடல் நம்மை வசியம் பண்ணுவதற்கு மூன்று முக்கிய காரணங்களை சொல்லலாம். G.V.பிரகாஷ் குமாரின் மெல்லிய இசை முக்கியமாக புல்லாங்குழல் மற்றும் வயலின் , ஸ்ரேயா கோஷலின் மனதை மயக்கும் குரல் உணர்வு பூர்வமாக பாடி இருக்கிறார்கள், நா. முத்துகுமாரின் கை வரிசையில் காதலில் உச்சத்தில் இருக்கும் பொது வரும் உணர்வுகளை (உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்) மிகவும் அழகாக எழுதி இருக்கிறார்.
பாடல் வரிகள்
பல்லவி
ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
பெண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
சரணம்: 1
ஆண்: நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
பெண்: நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
ஆண்: என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்களோடு
என்னை தொடரும் கனவுகள் நூறு
பெண்ணே பெண்ணே
பெண்: நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
பெண்: ஓ நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
ஆண்: உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
பெண்: ஓ நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
ஆண்: நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
சரணம்: 2
ஆண்: உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
பெண்: உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
ஆண்: உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
ஆண்: நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
ஆண்-பெண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
ஓ நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
ஓ நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
No comments:
Post a Comment