மணிரத்னம் டிவிட்டரில் மெம்பரா இருந்தா அவரோட படங்கள் வரும் போது படத்தோட ஒன் லைன்ய எப்படி ட்வீட் பண்ணுவார்ன்னு ஒரு சின்ன கற்பனை!
மற்றபடி மணிரத்னம் ஆவது ட்விட்டர்ல வர்றதாவது! அவர் socialize பண்றதே கம்மி இதுல சோசியல் நெட்வொர்கிங்ல வேற யா?
- நாயகன் - நாலு பேருக்கு நல்லது நடக்கும்ன்னா எதுவுமே தப்பில்லை!
- அஞ்சலி - பார்த்தேன் பா பார்த்தேன்! அஞ்சலி எழுந்துரு அஞ்சலி எழுந்துரு!
- மௌன ராகம் - ஏன்? பிடிக்கல. ஏன் பிடிக்கல? பிடிக்கல அதனால பிடிக்கல!
- தளபதி - தேவா, நியாயம்ன்னு ஒன்னு இருக்கு! சூர்யா, நீ என்னோட நண்பன் டா!
- ரோஜா - உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா? ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா?
- உயிரே - இந்த காதலில் மரணம் தான் ஏழு நிலை! இது இல்லை என்றால் அது தெய்வீக காதலில்லை!
- பாம்பே - வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை பொல்லாத ஜாதிமதம் இறைவனும் சொல்லவில்லை
- அலைபாயுதே - காதல் பொழுதில் விரும்பும் குறும்பு கல்யாணக்கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா!
- கன்னத்தில் முத்தமிட்டால் - விடை கொடு எங்கள் நாடே! மறுமுறை ஒரு முறை பார்ப்போமா? உயிரை உடம்புக்குள் புதைத்தோம்! வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்!
- ஆயுத எழுத்து - இனியொரு இனியொரு விதி செய்வோம், விதியினை மாற்றும் விதி செய்வோம்!
- ராவணன் - அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐ விரல் தீண்டிட நினைக்குதடி, அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி!

Mokkai!
ReplyDelete